தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா - நேர்த்தி கடன் செலுத்திய அமைச்சர் கயல்விழி

தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு தீர்த்த குடம் எடுத்து பக்தர்களுடன் ஊர்வலமாக வந்தார்.



திருப்பூர்: தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீர்த்த குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் திருக்கோயில் கோவிலின் பங்குனி மாத தீர்த்த திருக்குட திருவிழா ஊர் நாட்டாமை தலைமையில் திமுக நகராட்சி வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பக்தர்களுடன், தானும் தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.



மலர்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்த மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகரத் துணைச் செயலாளர் பிலோமினா, வார்டு பொறுப்பாளர் மணிமாறன், சுப்பையன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...