கோவையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்தவர்கள் வெகு விமரிசையாக கொண்டாட்டம்!

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியுடன் ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய தவக்காலம் 40 நாட்கள் அனுசரிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து புனித வெள்ளி அன்று மரித்து மூன்றாவது நாளான ஞாயிறு அன்று உயிர்த்தெழும் நிகழ்வே ஈஸ்டர் என அழைக்கப்படுகிறது.

இயேசு உயிர்ப்பு விழாவை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.



இதனையொட்டி கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு நடுஇரவு திருப்பலி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில், ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் போது இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.



அதன் பின் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...