மருதமலை முருகன் கோயிலில் லிப்ட் அமைக்கும் பணி - முதல்வர் துவக்கி வைப்பு!

கோவை மருதமலை முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.5.20 கோடியில் லிப்ட் மற்றும் ரூ.3.51 கோடியில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் உள்ள தார்சாலையை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: மருதமலை முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக மின்தூக்கி அமைக்கும் பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் எப்போதுமே மருதமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக விஷேச நாட்களில் அதிகளவிலான கூட்டம் காணப்படும். இந்நிலையில் மருதமலை முருகன் கோவிலில் மின்தூக்கி (லிப்ட்) அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் மற்றும் ரூ.3.51 கோடியில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் உள்ள தார்சாலையை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இந்த பூமிபூஜையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

கோவையில் நடைபெற்ற விழாவில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி, துணை மேயர் வெற்றிச் செல்வன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வடவள்ளி பகுதி செயலாளர் சண்முக சுந்தரம், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...