உடுமலையில் தலைகொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் புகழ்பெற்ற தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


திருப்பூர்: உடுமலையில் புகழ்பெற்ற பழமையான அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

சிவ ஸ்ரீ குமணன் குருக்கள் தலைமையிலும் யாகசாலை பூஜைகள் மணிகண்டன் ,லதனீஸ்வரசிவம், ஹரிஹரன் சுவாமிநாத சிவம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு மங்கள இசை, நான்காம் காலவேள்வி ஆரம்பம் , வேதிகார்ச்சனை , கோபூஜை ஆலயவிக்ரகங்களுக்கு காப்பு காட்டுதல் நடைபெற்றது.



பின்னர் புண்ணிய தலங்களான ராமேஸ்வரம் கொடுமுடி பேரூர் திருமூர்த்தி மலை பழனி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசம் மேல் ஊற்றபட்ட பின் அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



பின்னர் அலங்கார பூஜை தச தரிசனம் மற்றும் கோவிலில் நடைபெற்றது கும்பாபிஷேக பெருவிழா முன்னிட்டு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...