உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - பக்தர்கள் வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் கம்பம் போடுதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.



உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. வருகின்ற 13ஆம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் உள்ள கிணற்று நிரில் இரண்டு நாள் ஊறவைத்த அரச மரத்தாலான மூன்று கிளைகள் கொண்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.



மேலும் பக்தி முழக்கங்கள முழுங்க கும்பங்கள் அணிவகுத்து செல்ல மேளதாளத்துடன் பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு நடப்பட்டது . பின்னர் கோவிலை மூன்று முறை பூவோடு எடுத்து சுற்றிவந்து பூஜைகள் நடத்தப்பட்டன.



பூஜைகளுக்கு பின் திருக்கம்பத்துக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...