தொடரும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள்..! மனிதர்கள் மிருகமாகிவிட்டார்களா..?

குழந்தைகள் மீதான வன்முறை உள்ளிட்ட பாலியல் தாக்குதல்கள் பெற்றோர்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில காலங்களுக்கு முன்பு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் படிப்பறிவற்றவர்களாகவும், சமூகத்தின் மிகவும் கீழ் நிலையில் உள்ளவர்களாகவும் இருந்தனர். படிப்பறிவின்மையும், அவர்கள் வளர்ந்து வந்த சமூக பொருளாதார சூழ்நிலைகளுமே இக்குற்றங்களுக்கு காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது. இந்த எண்ணத்தை உடைக்கும் வகையில் தற்பொழுது படித்த, நல்ல பணியில் உள்ள குடும்பங்களில் இருந்து உருவாகிவரும் இளைஞர்களும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குழந்தைகளும், பருவ வயதினரும் இதுபோன்ற குற்றம் இளைப்பவர்களுக்கு இலக்காகின்றனர். அவர்கள் தங்களை எங்கும் ஒளித்துகொள்வதில்லை. அவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களோடு தினந்தோரும் உரையாடுகிறோம். அவர்கள் நமது நண்பர்களாகவோ, அல்லது பக்கத்து வீட்டினராகவோ, உறவினராகவோ, சிறந்த கல்வியறிவு பெற்றவராகவோ, சில நேரங்களில் நமது குழந்தைகளுடன் விளையாடுபவராகவோ இருக்கலாம். ஆனால், அவர்கள் குற்றம் செய்யும் வரை நமக்கு அவர்களுடைய கொடூர எண்ணங்கள் தெரியாது. இதுபோன்ற துன்புருத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுடைய பெற்றோர் தங்களது குழந்தை மீது இன்னும் கவனமாக இருந்திருக்கலாம் என வாழ்நாள் முழுதும் குற்றவுணர்வுடனேயே வாழ்வார்கள். 

சில நாட்களுக்கு முன்பு நமது தேசம் ஒரு 7 வயது இனிமையான ஹாசினி என்ற குழந்தையை இழந்தது. இந்தியா படிப்பறிவு மிக்க தேசமாக மாறுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், தஷ்வந்தைப் போன்ற படித்த குற்றவாளிகள் சமூக பொருப்பின்மை இல்லாமல் இருப்பது அவர்களை உபயோகமற்றவர்களாக மாற்றுகிறது. இதேப்போன்றே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ரித்திகா என்னும் 3 வயது சிறுமி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவர்கள் எவ்வாறு மனிதத் தன்மை அற்றவர்களாக மாறுகிறார்கள், அவர்கள் ஏன் குழந்தைகளை குறிவைத்து செயல்படுகிறார்கள்? ஆகிய கேள்விகள் நம்மிடத்தில் எஞ்சியிருக்கும். இதுகுறித்தான பல கேள்விகளுக்கு பல்வேறு நிபுனர்கள் அவர்களுடைய கருத்துக்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். 



அறம் அறக்கட்டளையைச் சேர்ந்த லதா சுந்தரம் பல்வேறு பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை தமது ஹேப்பி சைல்டு புராஜக்டின் மூலம் மிகவும் மகிழ்ச்சியுள்ளதாக மாற்றி வருகிறார். இந்த புராஜக்டின் மூலம் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு "குட் டச் மற்றும் பேட் டச்" ஆகியன குறித்து கற்றுத் தரப்படுகிறது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 

"நாங்கள் ஹேப்பி சைல்டு புராஜக்டை 2012-யில் துவங்கினோம். இதற்கு குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களுடைய நிகழ்ச்சிகளின் போது குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 

குழந்தைகளுக்கு இதைப் பற்றி விரிவாக எடுத்துக்கூற முடியாத நிலையில் அவர்களிடத்தில் எழிமையான வார்த்தைகள் மூலம் இவ்விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறோம். 

நாங்கள் குழந்தைகளிடம் பேசும் போது இது போன்ற நிகழ்வுகளை பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் தைரியமாக கூறும்படி அறிவுறுத்துகிறோம். ஆனால், இத்தனை வருட காலங்களில் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தின் படி பெற்றோர்கள் குழந்தைகளின் புகார்களை மிகவும் எழிதாக ஒதுக்கி விடுகின்றனர். அவர்கள் குழந்தைகள் தங்களை ஏமாற்றுவதாகவும், மிகைப்படுத்துவதாகவும் நினைக்கின்றனர். பெற்றோர்கள் இவ்வாறு செய்யக் கூடாது. அவர்கள் குழந்தைகளின் புகார்களுக்கு மிகுந்த கவனம் அளிக்க வேண்டும். 

பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளுடன் குழந்தைகளின் சார்பாகவே இருக்க வேண்டும். அவர்களுடன் மிகுந்த நேரம் செலவிட வேண்டும். இது குழந்தைகளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் தங்களுடைய பெற்றோர் இடத்தில் எல்லா விசயங்களைக் குறித்து பேச முன்வருவர். குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக கண்காணிக்க வேண்டும். 

அவர் மேலும் கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் சந்தித்த பல குழந்தைகள் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்" என்றார். 



வழக்கறிஞர் ராஜா செரீப், ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட. அவர் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் நம்மிடத்தில் கூறும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. குழந்தைகளும் இதில் இருந்து தப்பவில்லை. நம்முடைய சமூகத்தின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. நம் நாளைய தலைவர்களாக கருதும் இளைஞர்கள் இதுபோன்ற மனித தன்மையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என அறியும்போது மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது. 

நம்முடைய இந்த சமூகத்தின் நிலைக்கான காரணங்களை குறித்து ஆராய்வோமானால் நான் இணையதளம் மற்றும் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று நான் கூறுவேன். நமது இளைஞர்கள் இப்போதைய காலகட்டத்தில் இணையம் மூலமாக பல்வேறு ஆபாசத் தளங்களையும், வீடியோக்களையும் மற்றும் இதுபோன்ற பல்வேறு விசயங்களையும் எழிதாக கண்டுகளிக்கின்றனர். இது அவர்களை எவ்வித குற்றஉணர்வும் இல்லாமல் குற்றம்புரிய தூண்டுகிறது. மேலும், போதைப் பொருட்களின் தாக்கத்தின் காரணமாகவும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. பெரும்பாலான கொரூர குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் போதைப் பொருள் பயன்படுத்துபவராக இருக்கின்றனர். இதுபோன்ற புகார்கள் எழுப்பப்படும் போதெல்லாம் நாம் சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு வேரொருவர் மீது குற்றம் சுமத்த துவங்கி விடுகிறோம். சிந்தித்து செயல்பட்டால் இதுபோன்ற குற்றங்களை தடுத்து விடலாம்.

இதற்கான தீர்வாக நான் கூறுவது என்னவென்றால் அரபு நாடுகளில் உள்ளது போல அனைத்து ஆபாச இணையதளங்களையும் முடக்குவது ஆகும். இனையதளத்தினை பயன்படுத்த குழந்தைகளுக்கு குறைந்தபட்ச அனுமதி இருந்தாலே போதும். பெற்றோர்கள் கண்காணிப்பின் கீழ் குழந்தைகள் அவர்களுடைய அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவும், கணினி வழியாக விளையாடுவதற்காகவும் இணையதளத்தை பயன்படுத்தினாலே போதும். பல விளையாட்டுத் தளங்களில் விளையாடும் போது சில ஆபாச தளங்களின் விளம்பரங்கள் பாப்அப் வின்டோவாக காண்பிக்கப்படுகின்றது. இதனால், கண்காணிப்பு மிகவும் அவசியமாகும். சிறுவர்களுக்கு பெண்களை மரியாதையுடன் நடத்த கற்றுக்கொடுக்க வேண்டும். அதேப் போல் பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுபோன்ற நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். 

கல்வியை குழந்தைகள் மீது தினிப்பதைக் காட்டிலும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கருனை, அன்பு மற்றும் வாழ்க்கை நெறிமுறைகளை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். சிறந்த மனிதனாக இருப்பது ஒரு சாதனையாளனாக இருப்பதை விட முக்கியமாகும்" என்றார்.



மனோதத்துவ நிபுனரும், மைன்டு கேர் ஆலோசனை நிலையத்தின் நிறுவனருமான டாக்டர் பிரேமா, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து கூறும்பொழுது, பெற்றோர்களின் சரியான அரவனைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் இதுபோன்ற காட்டுமிரான்டித் தனமான குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளாக மாறுகின்றனர். இதே காலகட்டங்களில் பொருளாதார நிலை காரணமாக கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழ்நிலை உள்ளது. அதேப் போல் பண சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற பெற்றோர்களின் பிள்ளைகள் இன்பு மற்றும அக்கரையில்லாமல் வளர்கிறார்கள். 

இரு பாலினத்தைச் சேர்ந்த இளைஞர்களும் தங்களுடைய பருவ வயதில் பல மாற்றங்களை அடைகிறார்கள். ஹார்மோன் கோளாருகளும், ஆபாச காட்சிகளும் அவர்களுடைய மனதில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்களுடைய ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள எந்த நிலைக்கும செல்ல தயாராகிவிடுகிறார்கள். பெற்றோர்களால் அன்பு செலுத்தாத குழந்தைகள் மன ரீதியாக பாதிப்படைகின்றனர். அவர்களுடைய மனது பாதிப்படையும் போது அவர்கள் தாங்கள் செய்யும் காரியங்களுக்கான விளைவுகள் குறித்து கவலைப்படுவதில்லை. போதைப் பொருட்கள் அவர்களின் இந்த செயல்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது. 70 சதவிகித குற்றவாளிகள் போதைக்கு அடிமையானவர்களாகவே இருக்கிறார்கள். 

நான் இதுபோன்று பாதிக்கப்பட்ட பல சிறுமிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். பெரும்பாலானவர்கள் அவர்களுடைய பெற்றோர்களுடன் வருவார்கள். அதில் சில பெற்றோர்கள் நடந்த சம்பவத்தை தைரியமாக கூறுவார்கள். ஆனால், பல பெற்றோர்கள் சமூகத்தின் மீதுள்ள பயம் காரணமாக அவற்றை கூறுவது இல்லை. பெற்றோர்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், தகுந்த நேரத்தில் சரியான ஆலோசனைகளை வழங்காவிட்டால் குழந்தைகளின் மனதில் அந்த நிகழ்வின் தழும்புகள் வாழ்க்கை முழுதும் அவர்களைத் தொடரும். குடும்பத்திற்குள் ஒரு ஆரோக்கியமான பேச்சு வார்த்தை நிகழும் சூழல் இருக்குமானால், அது குழந்தைகளை அளுத்தத்தில் இருந்து விடுவிக்கும். அது உறவுகளை மேலும் வழுப்படுத்த உதவும்.



கோயமுத்தூர் சேப்டர் கிரெடாய் அமைப்பின் உறுப்பினரான ராஜேஷ் பி லுன்ட், குடியிருப்பு பகுதியில் ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து கூறுகையில், அனைத்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளிலும் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சென்னையில் நிகழ்ந்த ஹாசினி-யின் மீதான பாலியல் தாக்குதல் மற்றும கொலை சம்பவம், பாதுகாப்பை கோவையில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைத்து அடுக்குமாடி குடியிருப்போர் சங்கங்களையும் சிசிடிவி கேமிரா பொருத்துமாறு வலியுறுத்த உத்தேசித்துள்ளோம். சிசிடிவி கேமிராக்களை குழந்தைகள் விளையாடும் இடத்திலும், காரிடார் பகுதிகளிலும் நிறுவ அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...