அவிநாசி அருகே கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி மற்றும் தேர்திருவிழா நடைபெற்றது. அதிகாலை 4மணி முதல் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியன்று குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வந்தது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று விடியற்காலையில் 4 மணிக்கு தொடங்கியது.



பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷம் முழங்க' குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இந்த வருட திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாதுஅவிநாசி, கோபி,சத்தியமங்கலம், ஈரோடு, அந்தியூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் வடம் பிடித்து இழக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...