கோவைக்கு வரும் வந்தே பாரத் ரயிலால் எளிய மக்களுக்கு பயன் இல்லை..! - கு.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கவுள்ள வந்தே பாரத் ரயில் ஏழை எளிய மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. மாறாக விமானங்களில் செல்லும் செல்வந்தர்கள் பயனடையும் வகையில் அதிக கட்டணத்தில் இயக்கப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


கோவை: சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கவுள்ள வந்தே பாரத் ரயில் ஏழை எளிய மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கவுள்ள வந்தே பாரத் ரயில் ஏழை எளிய மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. மாறாக விமானங்களில் செல்லும் செல்வந்தர்கள் பயனடையும் வகையில் அதிக கட்டணத்தில் இயக்கப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவையிலிருந்து சென்னை செல்லக்கூடிய ஏழை எளிய மக்கள் முன்பதிவு இல்லா ரயில் பெட்டிகளில் 300 ரூபாய்க்கு பயணம் செய்த நிலையில், வந்தே பாரத் ரயில்களில் 1500 ரூபாய் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்களில் முன் பதிவில்லா பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ள பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதிக கட்டணம் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தக்கல் என்ற பெயரில் கூட்ட நெருக்கடி தகுந்தார் போல் கட்டணம் நிர்ணயித்து விற்பனை செய்கிறார்கள். பேசஞ்சர் (பயணிகள்) ரயில்களை ஏற்கனவே ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. அதனால் மாதக் கட்டணத்தில் செல்லக்கூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக கோவை-சேலம் பேசஞ்சர் ரயிலை ரயில் பாதை பராமரிப்பு என்ற பெயரில் மாதக்கணக்கில் நிறுத்தி வைத்துள்ளது. இதுபோல கேரளாவுக்கு செல்லும் எந்த ரயிலும் நிறுத்தப்படவில்லை. வந்தே பாரத் ரயிலை விடுவதற்கு முனைப்பு காட்டும் ஒன்றிய அரசு, கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரி தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை ரயில்கள் இயக்கப்படவில்லை.

தமிழகத்தில் இயங்கும் ரயில்களுக்கு இதுவரை மாநில மொழியிலேயே பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது. குறிப்பாக சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன், சோழன் மலைக்கோட்டை எனத் தமிழிலேயே இதற்கு முன்னர் பெயர் சூட்டப்பட்டு வந்தது. ஆனால் ஒன்றியத்தில் பாஜக பதவி ஏற்றதிலிருந்து எல்லா ரயில்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டி வருகின்றனர்.

எனவே ஒன்றிய பாஜக அரசு இந்த தமிழ், தமிழர் விரோத போக்கை நிறுத்துவதோடு,ஏழை,எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மக்களும் பயன்படும் வகையில் எளிய கட்டண ரயில்களை இயக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...