தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கூடுதல் கட்டிடப்பணிகள் - அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கூடுதல் கட்டிடப்பணிகளை ஆட்சியர் வினீத் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயலவிழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கூடுதல் கட்டிடப்பணிகள் நடைபெற்றுவருகிறது.



இந்தப் பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயலவிழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரைத்தளம் 865 ச.மீட்டரிலும், முதல் தளம் 820 ச.மீட்டரிலும், 2-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 3-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 4-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 5-ம் தளம் 820 ச.மீட்டரிலும், 6-ம் தளம் 820 ச.மீட்ரிலும் கட்டப்பட்டு வருகிறது.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் தரைத்தளத்தில் வரவேற்பறை கதிரியக்க அறை, சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையிலும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை, வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை, மருந்தக இருப்பு அறைகளும், முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு பணி மருத்துவர் அறை,

பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

2-ம் தளத்தில் அறுவை அரங்கு 2 எண்கள், நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை பணி செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வசதிகளுடனும். 3-ம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறைகள்,

4-ம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு பிரிவு பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகளுடனும், 5-ம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு,

காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் 6-ம் தளத்தில் கண் சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்),ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவரும், தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செந்தில்குமார், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தியாகராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...