ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தொண்டாமுத்தூரில் 2 லட்சம் மரங்கள் நடவு!

கோவை அடுத்த தொண்டாமுத்தூரில் பசுமை பரப்பை 33 சதவீதம் வரை அதிகரிக்க “பசுமை தொண்டாமுத்தூர்” என்ற இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று நிறைவு நடைபெற்றது.



கோவை: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தொண்டாமுத்தூர் பகுதியில் 2 லட்சம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியின் பசுமைப்பரப்பை 33% வரை அதிகரிக்கவும், நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கவும், நிலத்தடி நீர் மற்றும் மண் வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் “பசுமை தொண்டாமுத்தூர்” என்ற இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.



இதில் முதற்கட்டமாக ரோட்டரி சங்கத்துடன் இணைந்து 1 லட்சம் மரக்கன்றுகள் முதல் இரண்டு மாதங்களிலேயே விவசாயிகள் மூலம் நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதியாக கோவை கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்துடன் (சிபாகா) இணைந்து மேலும் 1 லட்சம் மரக்கன்றுகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் வழங்கப்பட்டது.

காவேரி கூக்குரல் இயக்கமும், கோவை கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கமும் (CEBACA) இணைந்து கோவை பழங்குடி மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக 1 லட்சம் மரங்கள் வழங்கி அதன் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இதற்கான நிறைவு விழா போத்தனூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவக வளாகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், ஜி.டி.வீலர் நிறுவனத்தின் இயக்குநர் ராஜ்குமார், பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், காவேரி கூக்குரல் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், சிபாகா தலைவர் சுவாமிநாதன், இயற்கை விவசாயியும், சமூக ஆர்வலருமான வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், பேசிய சிறப்பு விருந்தினர்கள், தொண்டாமுத்தூர் பகுதிக்கு உட்பட்ட 10 கிராம பஞ்சாயத்து மற்றும் 5 நகர பஞ்சாயத்தை சேர்ந்த கிராமப்புற விவசாயிகளின் 600 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் இலவசமாக நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் மரங்களுக்கான மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, இதுவரையில் 2.3 கோடி மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் 1 கோடி மரங்களும், பசுமை தொண்டாமுத்தூர் நிகழ்வுகளின் மூலம் மட்டுமே 2 லட்சம் மரங்களும் வழங்கியிருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...