பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமா நடைபெற்றது. இந்த நிகழ்வில், பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியவாரு அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய பக்தர்களை கண்டு பார்வையாளர்கள் பிரமிப்பு.


கோவை: பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிவரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 27ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.



அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி கோவிலுக்கு வரும் நிகழ்வு நடைபெற்றது.



பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடலில் பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி பறவை காவடி, வேல் காவடி, மயில் காவடி,போன்ற விதவிதமான அலங்கார வளைவுகளில் அமர்ந்தும், அந்தரத்தில் தொங்கிய படியும், கிரேன் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



திருவள்ளுவர் திடலில் தொடங்கிய இந்த ஊர்வலமானது வெங்கட்ரமணன் வீதி, உடுமலை சாலை கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உறவினர்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அந்தரத்தில் தொங்கிவாரு விதவிதமாக அலகு குத்திக் கொண்டு ஊர்வலமாக வந்ததைக் கண்டு பொதுமக்கள் பிரம்மிப்படைந்தனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...