கோவை சூலூர் அருகே குளத்தில் மிதந்த 90 வயது மூதாட்டி சடலம் - போலீசார் விசாரணை!

சூலூர் அருகேயுள்ள குளத்தில் குட்டியம்மாள் என்ற 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே குளத்தில் 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே குளத்தில் மூதாட்டி ஒருவரது சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளனர்.



தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் ஆதவாணன் தெருவைச் சேர்ந்த குட்டியம்மாள் என்பதும், கணவர் இறந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே இன்று காலை முதல் அந்த மூதாட்டியை காணவில்லை என புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூதாட்டியின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...