தங்க நகைகளில் நாளை முதல் ஹெச்.யூ.ஐ.டி., என்ற ஹால்மார்க் முத்திரை கட்டாயம்..! - பி.ஐ.எஸ் அமைப்பு அறிவிப்பு!

தங்க நகைகளில் நாளை (ஏப்ரல் 1) முதல் ஹெச்.யூ.ஐ.டி எனப்படும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்கள் பதிவு செய்திருப்பது கட்டாயம் என பி.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. நுகர்வோர் இந்த அடையாளத்தை பார்த்து நகைகளை வாங்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.


கோவை: தங்க நகைகளில் ஹெச்.யூ.ஐ.டி., எனப்படும் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்கள் நாளை முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பி.ஐ.எஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பானது, தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறையை அறிமுகம் செய்துள்ளது. இது ஒவ்வொரு நகைக்கும் பிரத்யேக குறியீட்டைக் கொண்டிருக்கும். இந்த நடைமுறை, நாளை முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, பி.ஐ.எஸ்., கோவை முதுநிலை இயக்குனர் கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



பி.ஐ.எஸ்., லோகோ, நகையின் துாய்மை தன்மை ஹால்மார்க் தனித்துவ 6 இலக்க அடையாள எண் ஆகிய மூன்று குறியீடுகளைக் கொண்ட ஹால்மார்க் முத்திரை அனைத்து தங்க நகைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாளை (ஏப்.1) முதல் நாடு முழுதும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

நுகர்வோர் நகை வாங்கும்போது இதனைக் கட்டாயமாக பார்த்து வாங்கவும். இந்த குறியீடு பெறாத நகைகளை விற்பனை செய்யக் கூடாது. நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படாத பழைய நகைகள் இருப்பின், அவற்றில் மறுமுத்திரை பதிவு செய்ய வேண்டும்.

பி.ஐ.எஸ்., பதிவு பெற்ற நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த தனித்துவ அடையாள எண் இன்றி விற்பனை செய்தால், அவர்களின் பதிவு ரத்து செய்யப்படும்.

ஏற்றுமதி நகைகள், 2 கிராமுக்கு குறைவான நகை, கண்காட்சி, விற்பனையை ஊக்குவிக்க வழங்கப்படும் நகைகள், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்வோர், மருத்துவப் பயன்பாட்டுக்கான தங்கம் ஆகியவற்றில் இந்த முத்திரை பதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பி.ஐ.எஸ்., பதிவு பெறாத நகை விற்பனையாளர்கள், ஹெச்.யூ.ஐ.டி. எண்ணுடன் ஹால்மார்க் செய்த நகைகளையோ, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளையோ விற்பனை செய்ய அனுமதி இல்லை. மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த குறியீட்டை சரிபார்க்க, ‘பி.ஐ.எஸ்., கேர்’ என்ற செயலியை (ஆப்) பி.ஐ.எஸ்., நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியைத் பதிவிறக்கம் செய்து, அதில், இந்த குறியீட்டை உள்ளிட்டால், நகை எங்கு முதலில் விற்பனை செய்யப்பட்டது.

நகையின் எடை, நகையின் தூய்மைத் தன்மை, என்ன வகையான நகை என்பது தெரிந்துவிடும். எனவே, நுகர்வோரின் நலன் பாதுகாக்கப்படும். ஹால்மார்க் செய்த நகையின் உண்மைத் தன்மையை சரிபார்த்து கொள்ள முடியும்.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை பி.எஸ்.ஐ., அலுவலக எல்லையில், மொத்தம் 3,728 விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 1,844 நகை விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

கோவை மண்டலத்தில், மொத்தம் 56 ஹால்மார்க் தரச்சான்று வழங்கும் மையங்கள் உள்ளன. கோவையில் மட்டும் 35 மையங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...