வால்பாறையில் பாதுகாப்பின்றி வெட்டப்படும் தேயிலைச் செடிகள் - பணியாளர்கள், பொதுமக்களுக்கு ஆபத்து எனப் புகார்

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை செடிகள் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணியாற்றுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு முக்கிய விவசாயமே தேயிலை ஆகும். நூறாண்டுக்கு ஒரு முறை தேயிலை செடியை முழுமையாக அகற்றப்பட்டு புதிய தேயிலை செடி நாத்துகள் நடப்பட்டு அதன்பின் அதை வளர்த்து தேயிலை செடியில் தேயிலை இலைகளை பறித்து தேயிலை தூள் தயாரிக்கப்படுகிறது.

இது பத்திற்கும் மேற்பட்ட ரகங்களாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தேயிலை தோட்ட பணியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் தற்போது பணி செய்து வருகிறார்கள். ஒரு தேயிலை செடியை வளர்த்து அதன்பின் தேயிலை பறிக்கப்பட்டு தேயிலை செடி குறிப்பிட்ட அளவுக்கு வெட்டப்பட்டு அதன் பின் மீண்டும் தேயிலை இலை பறிக்கும் வண்ணம் செடி பராமரிக்கப்படுகிறது.

அவ்வாறு வெட்டும் பொழுது இயந்திரங்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த இயந்திரங்கள் கூர்மையான கத்திபோல் உள்ளவை. தேயிலை தோட்டப்பகுதியில் தேயிலை செடியை வெட்டும் பொழுது, பொதுமக்கள் அவ்வழியாக கவனமாகச் செல்ல அறிவுறுத்தும் வகையில் முறையாக அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

மேலும், சிவப்பு நிற ரிப்பன் வைத்து அப்பகுதியை பாதுகாக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்ட பின்னரே தொழிலாளர்கள் இயந்திரத்தை பயன்படுத்துவார்கள்.

மேலும் இயந்திரத்தை பயன்படுத்தும் தொழிலாளர்கள் தலைக்கவசம், கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவார்கள். இது தேயிலை தோட்ட நிர்வாகம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பில் ஒன்றாகும்.



ஆனால் வால்பாறை அருகே நடுமலை எஸ்டேட் பகுதியில் சாலையோரமும் குடியிருப்பு அருகிலும் தேயிலை செடிகள் வெட்டப்பட்டு வருகிறது. அதில் மூன்று நபர்கள் வேலை செய்து வருகிறார்கள்.



வேலை செய்யும் நபர்கள் தலைக்கவசம் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லாமலும் இருப்பதோடு, முறையான அறிவிப்புப் பலகையும் வைக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சாலையில் செல்லும் மக்களுக்கும், இயந்திரங்களை பயன்படுத்தி தேயிலை வெட்டும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன்பே, எஸ்டேட் நிர்வாகம் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...