கோவையில் தலையில் கல்லைப்போட்டு நாய் கொலை - குடிபோதையில் சிறுவன் வெறிச்செயல்!

கோவை ரத்தினபுரி பகுதியில் தெருவோரம் படுத்திருந்த நாயின் தலையில் குடிபோதையில் இருந்த 17 வயது சிறுவன் கல்லைப் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(வயது63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது.

அப்போது, நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த அந்தச் சிறுவன் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல் ஒன்றை எடுத்து நாயின் தலையில் போட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அந்த நாய் உயிரிழந்தது.

இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அச்சிறுவனை கண்டித்துள்ளனர். மேலும் நாயின் உரிமையாளரான ஜீவா அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல்துறையினர் அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...