கோவை அருகே கிணத்துக்கடவில் பிரபலக் கொள்ளையன் உட்பட 4 பேர் கைது - ரோந்து போலீசார் அதிடி!

கோவை கிணத்துக்கடவு அருகே ரயில்வே மேம்பாலம் கீழ் நின்றுக் கொண்டு பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க திட்டமிட்டு கொண்டிருந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம், முருகன், முத்துப்பாண்டி, முப்பிடாதி என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஏட்டு பிரபு ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் அவர்கள் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படி 4 நபர்கள் நின்றிருந்தனர்.

அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பிடிபட்ட நான்கு பேரும் முன்னுக்குப் பின்முரனாக பேசியதால் போலீசார் நான்கு பேரையும் கிணத்துக்கடவு காவல் நிலையம் அழைத்து வந்து சோதனையிட்டனர்.

அப்போது, அவர்களிடம் கத்தி மற்றும் மிளகாய் தூள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கைதானவர்கள், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, முன்னீர் பள்ளம் தெப்பக்குளம் வீதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது24), பாளையங்கோட்டை, புது கிராமம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த முருகன் (வயது26), பாளையங்கோட்டை, காங்கேயன்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த சந்தானராஜா(எ)முப்பிடாதி (வயது26) என்பது தெரியவந்தது.

மேலும் 4 பேரும் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் நபர்களை கத்தியை காட்டி மிரட்டி மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் பிடியில் சிக்கியுள்ள அருணாச்சலம் மீது நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 10-க்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், முருகன் மீது கொலை வழக்கும், சந்தான ராஜா மீது அடிதடி வழக்கும் ஏற்கனவே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...