ஓடுபாதை புனரமைப்பு பணிகள் நிறைவு - 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்தில் நடந்து வந்த புனரமைப்பு பணிகளால் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீண்டும் பழைய நேரப்படியே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் நேற்று முன்தினம் முதல் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்தது.

விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இப்பணிகள் கடந்தாண்டு 2022 ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. ஓராண்டுக்குப் பின் தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ஷார்ஜா விமானம் தரையிறங்கும், புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் விமான ஓடுபாதை 2.9 கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. புனரமைப்பு பணிகள் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டன. சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகள் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சற்று தாமதமடைந்தன.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் காற்றின் அதிக ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் டிசம்பர் மாதத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்ட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, நேற்று முதன்தினம் மார்ச் 27(திங்கட்கிழமை) முதல் கோவை விமான நிலையம் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்தது. புனரமைப்பு பணிகளால் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீண்டும் பழைய நேரப்படியே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் ஷார்ஜா விமானம் அதிகாலை 4 மணியளவில் கோவையில் தரையிறங்கி மீண்டும் 4.45 மணியளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் விமானம் உள்பட சென்னை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகள் முன்பு இரவு 11 மணி வரை மற்றும் அதிகாலை வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் அவற்றின் சேவை நேரங்கள் மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

கோடை விடுமுறை காலம் விரைவில் தொடங்க உள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பல புதிய அறிவுப்புகளை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...