உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு - தாராபுரத்தில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஓ.பி.எஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்றதின் தீர்ப்பை வரவேற்கும் வகையில் தாராபுரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தாராபுரம் அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.



அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக தாராபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அண்ணா சிலை அருகே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டப்பட்டது.



இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...