வால்பாறை நகராட்சி கூட்டம் - கோடை விழா உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த வார்டு உறுப்பினர்கள்!

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு கவுன்சிலர்கள், மே மாதம் கோடை விழா நடத்த வேண்டும், காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.



கோவை: வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரம் வள்ளி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், ஆணையாளர் பாலு முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 21 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வட்டார் பால்ஷ் மற்றும் வேவர்லி பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும், அனைத்து வார்டு பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரேஷன் கடைகளை பராமரிப்பு செய்து தர வேண்டும்,

தெரு விளக்கு பராமரிப்பு பணியை மேற்கொள்ள கூடுதல் மின் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். வரும் மே மாதம் கோடை விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



இதேபோல், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து யானைகள் சேதப்படுத்திய சத்துணவு மையங்களை சரி செய்து தர வேண்டும், நகராட்சி மார்க்கெட் கடைக்காரர்களுக்கு வாடகை. பொதுமக்களின் வீட்டு வரியை 50% குறைக்க வேண்டும் நல்லமுடி பூஞ்சோலை சுற்றுலா தளத்தில் வாகன நிறுத்துமிடம், கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.

நெடுஞ்சாலை துறையில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, வாட்டர் பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, சோலையார் நகர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு சமையல் கூடம் கட்டுதல், மேலாண்மை திட்டம் விரிவாக்க பணியை மேற்கொள்ளுதல்.

தடுப்பு சுவர் கட்டுதல் கழிப்பிட பராமரிப்பு, சத்துணவு மைய பராமரிப்பு, சிறு பாலம் கட்டுதல், கிணறு அமைத்தல். கழிவு நீர் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய் பராமரித்தல், பயணிகள் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...