தாராபுரம் அருகேயுள்ள காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தாராபுரம் அருகேயுள்ள கொங்கூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் புனரமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே கொங்கூர் காளியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கொங்கூர் காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில வருடங்களாக புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.



இந்நிலையில் கோயில் பணிகள் முழுவதும் நிறைவடைந்து, இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக காலை கணபதி ஓமம் நடத்தப்பட்டு, சிவன் கோவில் மற்றும் காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



அதன் பிறகு திருக்கோயில் கோபுரத்திற்கு கலச நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...