கோவை அருகே மின்கம்பத்தை மோதி உடைத்த காட்டுயானை - மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் மின் கம்பத்தில் மோதிய ஆண் காட்டுயானை ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியானது. கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்து ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் இன்று அதிகாலை ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி வனப்பாதுகாவலர் செந்தில் தலைமையிலான பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.



அதில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் உணவு தேடி வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்றபோது மின் கம்பத்தில் மோதி உள்ளது.



அப்போது மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக பலியானது தெரியவந்தது.



இதையடுத்து, கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...