கோவை பெட்ரோல் குண்டுவீசிய வழக்கு - இளைஞரிடம் சிபிசிஐடி விசாரணை!

இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை உத்தரவுக்கு எதிராக கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான இளைஞர் முகமதுஷபியை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து மத்திய உள்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டது. இதனைக் கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

கோவைப்புதூரில் கடந்த செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பின் தமிழக - கேரளா பொறுப்பாளர் ஆனந்த கல்யாணராமன் என்பவரது வீட்டு முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவி ஆணையர் ரகுபதி ராஜா, ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல்வேட்டை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில், கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த முகமது ஷபி (வயது29) என்பவரை குனியமுத்தூர், செல்வம் நகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். கைதான முகமது ஷபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முகமது ஷபிக்கு வேறு வழக்கில் தொடர்பு உள்ளதா? என ஏற்கனவே விசாரணை நடந்த நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் முகமது ஷபியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, முகமதுஷபியை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்திவருகிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...