'வந்தே பாரத்' ரயில் சேவை - கோவை ரயில் பயணிகள், தொழில்துறையினர் வரவேற்பு!

கோவையிலிருந்து சென்னை வரை 'வந்தே பாரத்' ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. கோவையில் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னை வரை இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தொழில் நகரான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் 'பாயிண்ட் டூ பாயிண்ட்' பிரிவில் இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் என 5 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு சென்னைக்கு ரயில் சேவை வழங்கப்படுகிறது.

கேரளாவிலிருந்து கோவை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களை சேர்த்து தினமும் கோவையிலிருந்து 15 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆன்மிகம், சுற்றுலா, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக கோவை மாவட்டத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.



இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை கோவை வழித்தடத்தில் தொடங்க வேண்டும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் கோவை - சென்னை வழித்தடத்தில் விரைவில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதற்கு ரயில் பயணிகள் மற்றும் தொழில்துறையினர் வரவேற்பு தெரிவிதுள்ளனர்.

கோவை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஜமீல் அகமது கூறுகையில்,"வந்தே பாரத் ரயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பகல் நேரத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்சேவையை போல் இரவில் படுக்கை வசதியுடன் கூடிய முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் வசதியுடன் கூடிய ரயில் சேவையையும் தொடங்க வேண்டும்.

கோவையிலிருந்து- மதுரை மற்றும் பெங்களூருவுக்கு இரவு நேரங்களில்

‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ முறையில் ரயில் சேவை தொடங்க வேண்டும்"என்றார்.

கொங்கு குளோபல் போரம்(கேஜிஎப்) இயக்குநர், நந்தகுமார் கூறுகையில், "வந்தே பாரத் ரயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த வரவேற்கத்தக்கது. கோவை -சென்னை வழத்தடத்தில் பேருந்து சேவையை விட ரயில்சேவையை பயன்படுத்தவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். கோவையிலிருந்து -பெங்களூரூவுக்கும் இரவு நேர ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

போத்தனூர் ரயில் பயனாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில்,"கோவை -சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது. கோவையிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

கோவை - சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள்: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை

சேவை: புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் அனைத்து நாட்கள்.

கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும். மீண்டும் சென்னையில் மதியம் 2.20மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும் என உத்தேச தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...