பல்லடம் அருகே தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு!

பல்லடம் அடுத்த கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில் உள்ள முல்லைவனம் என்ற தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் சிலர் தீவைத்த நிலையில், தீ மளமளவென பரவியதில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் கருகி சேதமடைந்தன.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள தாவரவியல் பூங்காவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்துமுட்டிபாளையம் கிராமம்.



இந்த கிராமத்தில், 8 ஏக்கர் பரப்பளவில் சுமார் 7,000 மரக்கன்றுகள் ஊர் மக்களால் நடப்பட்டு முல்லைவனம் என்ற தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வேம்பு, புங்கன், பூவரசன், அத்தி, நெல்லி போன்ற பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் இந்த பூங்காவிற்கு வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் முல்லைவனம் பகுதியில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்துள்ளனர்.



மர்மநபர்கள் தீ வைக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



புற்களுக்கு வைக்கப்பட்ட தீ மளமளவென பரவியதால் ஐநூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்து நாசமானது.

இதனை கண்ட அப்பகுதி மக்களே இணைந்து, தண்ணீர் ஊற்றிய நிலையில், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்று மர்ம நபர்கள் வனப்பகுதிக்கு தீ வைத்ததாக கூறியுள்ள அப்பகுதி மக்கள், 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...