மடத்துக்குளம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம்

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையில் அரசியல் பயிலரங்க நிகழ்வு நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையில் அரசியல் பயிலரங்க நிகழ்வு நடைபெற்றது.

குமரலிங்கம் பேருந்து நிலையத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் புலிக்கொடி ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அதே இடத்தில் தளியை சார்ந்த ஈழ போராட்டத்திற்காகத் தடா வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட மறைந்த போராளி தடா.மாரிமுத்து முதலாம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு கையூட்டு ஊழல்-ஒழிப்பு பாசறை மாநிலச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது.



தொடர்ந்து அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், அரசு அலுவலகங்களில் கையூட்டு கொடுக்காமல் வேலைகளைச் செய்வது குறித்த வழிமுறைகளையும், கையூட்டு கொடுத்திருந்தால் அதைத் திரும்பப் பெறும் வழிமுறைகள் குறித்தும் பேசினார் தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் வாக்குச்சாவடி கட்டமைப்பு குறித்தும், வாக்குச்சாவடி அரசியல் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.

தமிழ்த்தேசிய அரசியல் குறித்தும், நாம் தமிழர் கட்சியின்‌ கொள்கைகள் குறித்தும் சிறப்புரையாற்றிய மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, அருந்ததியர் சமூக மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாகக் கூறப்படும் அவதூறை மறுத்துப் பேசினார்.

மேலும் அவர் பேசும்‌போது, அருந்ததிய சமூக மக்களின் சமூக, பொருளாதார விடுதலையின் திராவிட கட்சிகளின் துரோகங்கள் குறித்தும், இன்னும்‌ அவர்களை ஏழ்மை நிலையில் வைத்து வாக்கிற்குக் காசு கொடுத்து ஏமாற்றுவது குறித்தும், அரசியல் அங்கீகாரம் வழங்காதது குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.



இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் மற்றும் பொள்ளாச்சி மண்டல பொறுப்பாளர் சுரேசுகுமார் கடந்தாண்டு சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குச் சிறந்த கள செயல்பாட்டாளர்கள் என்ற சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 287 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...