தாராபுரம் அருகே வாட்ஸ் ஆப் கேட்டால் கஞ்சா ஹோம் டெலிவரி! - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!

தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாகன சோதனையில் பைக்கில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை கைது செய்து நடத்திய விசாரணையில் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் மூலம் ஆர்டர் செய்துவிட்டு, கூகுள் பேவில் பணம் செலுத்தினால் கஞ்சாவை ஹோம் டெலிவரி செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.



ஒட்டன்சத்திரம் - திருப்பூர் புறவழிச்சாலையில் குண்டடம் - திருப்பூர் பிரிவில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் துணை ஆய்வாளர் பிரதாப் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது பை முழுவதும் கஞ்சா தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.



தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள கன்னியம்பட்டியை சேர்ந்த பாண்டி(38), மற்றும் சிவகாளை(28) என்பது தெரியவந்தது.



மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆந்திராவில் இருந்து கிலோ கணக்கில் பார்சல் லாரி சர்வீஸ் மூலம் கஞ்சாவை வாங்கி உசிலம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளனர்.

இதனையடுத்து வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்கள் மெசேஜ் அனுப்பியவுடன் ஜிபேயில் (GPay) பணத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக யாரும் சந்தேகப்படாத வகையில் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சப்பளை செய்து வருவதாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தூரமாக உள்ள ஊர்களுக்கு ஆள் செல்ல முடியாத கிராம பகுதிகளுக்கும் கூட கொரியர் மூலம் கஞ்சா பொட்டலத்தின் மீது வாசனை திரவியங்கள் அடித்து கஞ்சா வாடை அடிக்காதவாறு பிளாஸ்டிக் கவர்களால் நன்கு சுத்தி கஞ்சா இலைகளை பவுடராக்கி பார்சல் செய்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் உசிலம்பட்டியில் இருந்து பல்லடத்தைச் சேர்ந்த வியாபாரி பழைய பாக்கியை நேரில் தருவதாக கூறியதால் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஒட்டன்சத்திரம் சாலை தாராபுரம் எரகம்பட்டி செக்போஸ்டில் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக மாற்று வழியில் வந்து குண்டடம் செக் போஸ்டில் மாட்டிக்கொண்டதாக குற்றவாளிகள் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தாராபுரம் டி.எஸ்.பி தனராஜ் தலைமையில் குண்டடம் போலீசார் குற்றவாளிகளை மேலும் துருவி துருவி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாராபுரம் பகுதியில் கஞ்சா கடத்தியவர்கள் கைது செய்யப்படுவது தாராபுரம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...