கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை!

பொள்ளாச்சி ரயில்வே நிலையத்தில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.பால்சிங்தோமர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில்வே நிலையத்தில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.பால்சிங்தோமர் ஆய்வு மேற்கொண்டார். ரயில்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் மயமாக்கல் நிறைவு பணியைப் பார்வையிட்டதுடன், பயணிகளுக்கு அடிப்படை வசதி எவ்வாறு உள்ளது எனவும் ஆய்வு செய்தார்.

முன்னதாக பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து வரும் போது தண்டவாளத்தின் உறுதித் தன்மை, அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் நல்லசாமி மற்றும் பலர் பாலக்காடு கோட்ட மேலாளர் எஸ்.பால்சிங்தோமரிடம் பல்வேறு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் இருப்புப் பாதை நடைமுறையில், இருக்கும் போது அந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக கோவைக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை 100 கி.மீட்டராக அதிகப்படுத்த வேண்டும். பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்று கொண்ட கோட்ட மேலாளர் கூறும்போது, பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்குத் தேவையான அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசின் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும். பொள்ளாச்சியிலிருந்து புதிய ரயில்கள் இயக்க பரிந்துரைக்கப்படும், என்றார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...