கோவையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், கோவை ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு எழுதுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்கள் என்று ஆட்சியர் தெரிவித்தார்.


கோவை: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் 128 தேர்வு மையங்களில் 35,827 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.



இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:



12ஆம் வகுப்பு பொது தேர்வுகளை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும், அந்தெந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்வித்துறை செய்துள்ளது.

இந்த தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்கள். கோவை மற்றும் பொள்ளாச்சி இரண்டையும் சேர்த்து, 35,827 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 186 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்புகளுக்காக 180 பேர் கொண்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிவது போன்ற மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிறப்பு ஏற்பாடுகள் ஏதேனும் தேவைப்பட்டால் அவை செய்து தரப்படும்.

ஊட்டி உருது பள்ளியில் சத்து மாத்திரைகள் உட்கொண்டு தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவிகளில் இரண்டு மாணவிகள் பொதுபிரிவிலும் ஒரு மாணவி ஐசியூவிலும் உள்ளனர். மூவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு, ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...