வெள்ளலூரில் குடும்பத்தகராறில் கணவரை வெட்டிய மனைவி - பரபரப்பு!

வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுப்பிரமணி -செல்வி தம்பதி பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், மகளை சந்திக்க வந்த சுப்பிரமணியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் கணவரை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே குடும்ப தகராறில் கணவரை மனைவியே கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி (44) -செல்வி தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி சூர்யா (21) என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சுப்பிரமணி மற்றும் செல்வி ஆகிய இருவரும் பிரிந்து சுப்பிரமணி தனியாகவும், செல்வி மகன் மற்றும் மகளுடனும் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே அடிக்கடி தனது மகள் பவித்ராவை மட்டும் தந்தை சுப்பிரமணி சந்தித்து வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். வழக்கம்போல சுப்பிரமணி நேற்று முன்தினம் தனது மகள் பவித்ராவை சந்தித்து பேசி விட்டு, செலவிற்கு பணம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மகன் சூர்யா, சுப்பிரமணியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். உடன் இருந்த மனைவி செல்வி திடீரென வீட்டில் இருந்த கத்தியால் சுப்பிரமணியின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படுகாயமடைந்த அவரை மகள் பவித்ரா மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார், மனைவி செல்வி மற்றும் மகன் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறில் மனைவியே கணவரை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...