ஜெயலலிதாவின் 75வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் - தாராபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன், இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கொண்டரசம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.



திருப்பூர் அஇஅதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.



அதிமுக மேற்கு, தெற்கு, கிழக்கு ஒன்றியச் செயலாளா்கள் செய்யார் டி.ஆர். பாலகுமாரன், டி. ரமேஷ், கே, செல்வகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தாா்.

பொதுக் கூட்டத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் பேசியதாவது:



கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மறைந்த அம்மாவின் அரசு வழங்கியது. பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ஏழைக் குடும்பங்களுக்கு கறவை மாடு ஆடு கோழி மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்தோம். ஆனால், திமுக அரசு அனைத்து அம்மா செயல்படுத்தி வந்த நல்ல திட்டங்களையும் நிறுத்திவிட்டது.



திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததுபோல குடும்பத் தலைவிக்கு ரூபாய் ஆயிரம் தருவதாக கூறி அதை நிறைவேற்றவில்லை. நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் இன்னும் பொது மக்களுக்கு வேட்டி சேலை வழங்கவில்லை. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக விரைவில் அறிவிக்கப்படுவார்.



அம்மாவின் ஆட்சி அமைய தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நகர ஒன்றிய பேரூர் கழக கிளைக் கழக வார்டு கழக நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 60 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்ன...

லாரியின் இடதுபுற சக்கரம் ஏறி சைக்கிள் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 70 வயது காளிமுத்து சைக்கிளில் சென்றபோது, அலட்சியமாக வந்த லாரி மோதியது. கீழே விழுந்த காளிம...

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசின் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் காணொளிக் காட்சி மூலம் உ...

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...