திருப்பூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தி திருப்பூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பட்டை நாமம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 5,200 முதல் 20 ஆயிரத்து 200 வரை வழங்க வேண்டும், ஆனால் தற்போது 1,900 மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.



அதேபோல், சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணி காலத்திலும் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பத்து சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சலவை படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...