புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு - தாராபுரத்தில் நூதன ஆர்ப்பாட்டம்!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தாராபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தாராபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இணைந்துதாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாயிலின் முன்பு கண்களுக்கு கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை இணைச் செயலாளர்ஹரிசங்கர் தலைமை தாங்கினார். அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிபால ராஜசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்ஈஸ்வரமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி, சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட நிர்வாகி பீட்டர், கால்நடைத்துறை விஜயகுமாரி, உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...