தாராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு, காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்து, ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வழிநடப்பு செய்து வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் விதுர்வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மையத்தின் சார்பிலான இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசின் அச்சாணியாக ஆணிவேராக இருந்துவரும் வருவாய்த்துறை அலுவலர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது எனவும், பறிக்கப்பட்ட வருவாய் துறை அலுவலர்களின் அதிகாரங்களை அரசு திரும்ப வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வருவாய்த்துறை அலுவலர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்பட்டு, துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கடந்த நான்காண்டுகளாக துணை ஆட்சியர் பட்டியல் வெளியிடப்படாமல் இருப்பதை உடனடியாக அரசு வெளியிட வேண்டும், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின்போது பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாணையும், பட்டாதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, உடனடியாக பதவி உயர்வு ஆணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் தங்களது அலுவலகத்தை விட்டு ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வட்ட கிளை நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...