பொள்ளாச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - விவசாயிகள் வெளிநடப்பால் பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் பிரியங்கா இல்லாமல் விவசாயிகள் குறைதீர் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் கலந்துக் கொள்ளாமல் நடக்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.



கோவை: தமிழகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெறாத நிலையில், தற்சமயம் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா விவசாயிகளுக்கும் விவசாய சங்கங்களுக்கும் விவசாய குறைத்தீர் கூட்டம் நடைபெறுவதாக பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பியும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மற்றும் வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.



சார் ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை சென்றுவிட்டதால் தாசில்தார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். விவசாயிகளிடம் உங்கள் குறைகளை நீங்கள் விண்ணப்பமாக கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியிடப்பு செய்தனர்.

மேலும் சார் ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை செல்கிறார் என்ற தகவலை எங்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருந்தால் நாங்கள் விவசாய பணியினை விட்டு விட்டு இங்கு வந்திருக்க மாட்டோம் எனவும் கூறி அரசு அதிகாரிகள் நடத்திய கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...