உடுமலையில் கோயில் திருவிழா - கடவுள்களின் வேடமணிந்து ஆடிப்பாடிய பக்தர்கள்!

உடுமலை அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீ புது மாரியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில், ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் வீதிகளில் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு எடுத்தல் திருகல்யாண நிகழ்ச்சி என மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக, ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் பக்தி பாடல்களுக்கு ஆட்டம் பாட்டத்துடன் ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளான கண்டு களித்தனர்.



இது குறித்து மாறுவேடம் அணிந்த பக்தர் கூறுகையில், வருடந்தோறும் கோவில் திருவிழாவில் முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி நோய்நொடியின்றி கிராம மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...