தாராபுரத்தில் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்கம் - 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு!

சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மாநாடு, சென்னையில் வரும் 14ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க கோரியும் தாராபுரத்தில் சிபிஎம் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.


திருப்பூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் மார்ச் 14ஆம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.

இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும் 10 அம்ச கோரிக்கைகள் குறித்தும் தாராபுரத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

அப்போது, அரசு போக்குவரத்தை பலப்படுத்தவும், பாதுகாத்து வரவும் செலவுக்கு இடைப்பட்ட தொகையை ஈடுகட்ட தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், காலாவதியான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை வாங்கிட வேண்டும், பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்ய உதவி பாகங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகை 10,000 கோடியை அரசு திரும்ப வழங்க வேண்டும், 1.4.2013க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பண பலன்களை வழங்கிட வேண்டும், போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் வேலைக்கு ஆட்களை நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் குறித்தும் இந்தப் பிரச்சாரத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கனகராஜ், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கிளை தலைவர் அப்துல் ஜாஃபர், மண்டலத் துணைத் தலைவர் ராமசாமி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...