உடுமலை அருகே மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி ஆர்ப்பாட்டம்!

100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறது.

எலையமுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளித்து சட்டத்தின் கீழ் வேலை உறுதி உரிமை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்,



அரசு அறிவித்துள்ள சட்டக்கூலி 281லிருந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தினமும் தொழிலாளர்களுக்கு கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் வேலை கொடுப்பதில் சாதி பாகுபாடு காட்டி வேலைகளுக்கு செய்வதை கைவிட வேண்டும்.



அனைவருக்கும் சமமான வேலை வழங்க வேண்டும். பணி தளத்திற்கு காலை 8 மணிக்கு வந்து விட வேண்டும் என்று கடுமையாக நிர்பந்திப்பதை கைவிட்டு 9 மணிக்கு வரவேண்டும் என்பதை நியாயமாக உறுதிப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எலையமுத்தூர் தம்பிராஜ். சையத். மருதமுத்து. வெங்கடாசலம். மற்றும் தாலூகா நிர்வாகிகள். செளந்தரராஜன். சி.சுப்பிரமணியம். கிருஷ்ணசாமி. ராஜேந்திரன் உள்ளிட்ட ‌பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...