உடுமலையில் பேருந்தை மறித்து கண்ணாடியை உடைத்த 'படையப்பா' யானை - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மூணாறு சாலையில் நள்ளிரவில் வந்த பேருந்தை வழிமறித்த ‘படையப்பா' யானை, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கிவிட்டு சென்றது. இதை பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக-கேரளா எல்லை பகுதியான மறையூர் பகுதியில்படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலம். மறையூர் மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக இந்த யானை அவ்வப்போது உலாவரும்.

குறிப்பாகபொதுமக்கள் நடமாடும் பேருந்து நிலையம், தேயிலை தோட்டம் குடியிருப்பு பகுதிகள்உள்ளிட்ட இடங்களில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை இந்த படையப்பா யானை வழக்கமாக வைத்துள்ளது. அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் படையப்பா யானை செயல்படுகிறது.



இதற்கிடையில், உடுமலை மறையூர் சாலையில் நள்ளிரவு திருவனந்தபுரத்தில் இருந்து பழநி சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தை படையப்பா காட்டுயானை திடீரென வழிமறித்தது.



பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கியது. ஆனால் டிரைவர் சிறிதும் அச்சப்படாமல் சாதுர்யமாக பேருந்தைஇயக்கி கடந்து சென்றார்.



இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...