சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமென சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் பேட்டி


தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான் எனவும், ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், தற்போது தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாஜக அரசினால் நடத்தப்படுபவை என குற்றம்சாட்டினார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது சட்டமன்றத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு இல்லை எனவும், தற்போது முதலமைச்சர் பொறுப்பு என்பது மலர்கீரிடம் அல்ல, அது முட்கீரிடம் எனவும் அவர் கூறினார்.

மேலும், இனிமே தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான் எனவும், ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தை காட்டக்கூடாது எனவும், தங்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட வாக்குரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டுமெனவும் கூறிய அவர், ரகசிய வாக்கெடுப்பு என்று இல்லாமால் எப்படி வாக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் அந்தந்த கட்சிக்கு உள்ள பலம் தான் நிருபீக்கப்பட்டு இருக்குமெனவும் தெரிவித்தார். மேலும், எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலனை தவிர தனக்கு எதுவும் இல்லை என நற்பெயர் எடுப்பதே தனது நோக்கம் எனவும், பணம் சேர்ப்பது அல்ல என மக்களை திருப்தி படுத்தும் வகையில் செயல்பட வேண்டுமெனவும், முதலமைச்சர் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தா.பாண்டியன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...