கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற கட்டிட தொழிலாளி கைது

கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற புலியகுளம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்றவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கோவை சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி என்பவரது மகன் ஆனந்தன் (39) என்பது தெரியவந்தது.

மேலும் கட்டிட வேலை செய்து வந்த ஆனந்தன் பணத் தேவைக்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...