கோவையில் உரிமையாளருக்கு தெரியாமல் ரூ.6 லட்சம் திருடிய காசாளர் கைது!

கோவையில் புட் பேக்டரி உரிமையாளர் கிருஷ்ணகுமாருக்கு தெரியாமல் சிறுக சிறுக பண மோசடியில் ஈடுபட்ட காசாளர் சுரேந்தர் என்பவரை பீளமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மொத்தமாக ரூ.6.05லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: பீளமேடு பகுதியில் புட் பேக்டரி உரிமையாளருக்கு தெரியாமல் பண மோசடியில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தண்ணீர் பந்தல் அருகே புட் பேக்டரி ஒன்றை நடத்தி வருகின்றார். கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தந்தை தங்கவேலு இருவரும் இணைந்து இந்த தொழிலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் நிறுவனத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரேந்தர் (31) என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார்.

நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து வந்தார். பணியின் போது சுரேந்தர் தனது வங்கிக் கணக்கிற்கு, கம்பெனி வங்கிக் கணக்கிலிருந்து சிறுக, சிறுக பணத்தை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். பெருந்தொகையாக இல்லாமல் சிறுக, சிறுக பணத்தை நூதன முறையில் சுரேந்தர் திருடியது ஆரம்பத்தில் உரிமையாளரான கிருஷ்ணகுமாருக்கு தெரியவில்லை.

இந்நிலையில் வரவு செலவில் சற்று மாறுதலை உணர்ந்த நிர்வாகத்தினர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சுரேந்தர் ஆறு மாத காலமாக ரூ.6.05 லட்சத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியது தெரிய வந்தது. இது குறித்து புட் பேக்டரி உரிமையாளர் கிருஷ்ணகுமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பணத்தைக் காக்க வேண்டிய காசாளரே, பணத்தை திருடி கைதான சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...