கோவையில் பொறியாளரிடம் கத்தியை காட்டி வழிப்பறி! - போலீசார் விசாரணை

கோவையைச் சேர்ந்த பொறியாளர் வீரமணி(31) பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் இரவு வீட்டிற்குச் சென்ற போது, நெசவர் காலனி அருகே வழிமறித்த மர்ம கும்பல் கத்தியைக் காட்டி, தங்க செயின், செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றது. புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை நெசவர் காலனி அருகே இரவில் தனியாகச் சென்ற பொறியாளரிடம் மர்ம கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது பணியை முடித்துவிட்டு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

நெசவர் காலனியில் உள்ள டாஸ்மாக் அருகே சென்றபோது, அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, வீரமணி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரூ.1500 ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரமணி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...