உடுமலையில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் வீணாகும் அவலம் - ஏலம் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், வெயில் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் சேதமாகி வருவதால், அதனை பராமரிக்க வேண்டும் அல்லது ஏலம் விட நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடுமலை காவல் உட்கோட்ட பகுதியில் உடுமலை காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான கிராமங்கள் மற்றும் உடுமலை, ஆனைமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் உள்ளன.

இந்த சாலைகளில் நடைபெறும் வாகன விபத்துகள், குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்துக்கு முன்பும், தனியாருக்கு சொந்தமான இடத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இந்த வாகனங்கள் முறையான பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாமல் இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது. மீண்டும் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது,

பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு முன்பும் தனியாருக்கு சொந்தமான நிலத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த வாகனங்களுக்கு கொட்டகை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தாமல் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் அவை வெயில், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது.

அந்த வாகனங்களுக்கு கொட்டகை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தாமல் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் அவை வெயில், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து வருகிறது.

இந்த வாகனங்கள் திருட்டு போக வாய்ப்புள்ளதுடன், தனியாருக்கு சொந்தமான இடத்தில் கேட்பாரற்று பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களை போலீசாரும் கண்காணிப்பதில்லை. இதனால் மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உதிரிபாகங்கள் திருட்டு போவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிய முறையில் பாதுகாப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அதை உரிய முறையில் ஏலம் விட்டு அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதற்கு முன்வர எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...