கோவை சமூக ஆர்வலர் முகமது ரஃபி-க்கு 'சேவைத் திலகம் விருது' வழங்கிய பேரூர் ஆதினம்!

தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவரான முகம்மது ரஃபி, மத நல்லிணக்க பணிகளில் ஈடுபட்டு வருவதை போற்றும் வகையில் சேவைத் திலகம் விருது வழங்கி பேரூர் ஆதினம் கவுரவித்துள்ளது.



கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் வசிப்பவர் முகமது ரஃபி. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவரான முகம்மது ரஃபி, மத நல்லிணக்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி என அனைத்து பண்டிகைகளையும், சமய வேறிபாடுகளின்றி, அனைத்து மத சான்றோர்களுடன் கொண்டாடுவார்.



இதுமட்டுமின்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதேபோன்று தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.

போதை பொருள் தீமைகள் குறித்து குறும்படங்கள் தயாரித்து, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் கடந்த கொரோனா காலத்தில், பசி பட்டினியுடன் தவித்த வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு உணவளித்து உதவினார். 

ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த முகமது ரஃபி, தன் மனைவி மற்றும் அண்ணன் மகள் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள் மற்றும் பணத்தை செலவிட்டு உணவளித்து வந்தார்.



இந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. இவ்வாறு, மதபாகுபாடின்றி அனைத்து நலப்பணிகளையும் செய்து வருகின்ற இவரின் சேவையை பாராட்டி, கோவை பேரூர் ஆதினம் சார்பாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி-க்கு சேவை திலகம் விருது வழங்கப்பட்டுள்ளது.

பேரூர் ஆதினம் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் முகமது ரஃபி-க்கு  சேவை திலகம் விருதை வழங்கி கவுரவித்தார். 

இஸ்லாமியரான முகமது ரஃபி-க்கு , இந்து வழிபாடு நடக்கின்ற பேரூர் மடத்தில் மடாதிபதியான சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வழங்கிய விருது மத நல்லிணக்க ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...