கோவை வடக்குமண்டலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சித்‌ திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.25-க்குட்பட்ட காவலா்‌ குடியிருப்பு, காந்தி மாநகர் பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம் பிரித்துக் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.25-க்குட்பட்ட காவலா் குடியிருப்பு, காந்தி மாநகர்‌ பகுதியில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கிய பின்னர்‌, அப்பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ முறையாக உள்ளதா? என ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குறைகளைக்‌ கேட்டறிந்தார்‌.

பின்னர்‌ மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34-க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌, ஜீவா நகரில்‌ ரூ.5.20 கோடி மதிப்பீட்டில்‌ 1,680 மீட்டர் தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ கட்டுதல் மற்றும் சிறுபாலங்கள் கட்டுதல், ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 850மீட்டருக்கு தொலைவிற்குத் தார் சாலை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு, அவ்விடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விரைவாகச் செய்து முடிக்கச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



அதனைத்தொடர்ந்து வார்டு எண்.71-க்கு ஆர்எஸ்புரம் திருவேங்கடசாமி சாலையில் IDUM திட்டத்தின்கீழ் ரூ.37லட்சம் மதிப்பீட்டில், 2300மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், மழைநீர் வடிகால் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.72-க்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌, சுப்ரமணியம்‌ சாலையில்‌ உள்ள மாதிரி பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.110.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ ஆய்வுக்கூடங்கள்‌, ஸ்மார்ட்‌ வகுப்பறை மற்றும்‌ மாணவியர்‌ தங்கும்‌ விடுதி ஆகிய கட்டிடங்களின்‌ கட்டுமானப் பணியினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்பு, வார்டு எண்‌.72-க்குட்பட்ட பூ மார்க்கெட்‌ பகுதியில்‌ ரூ.120 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்டு வரும்‌ இடங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டல தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்‌ தவமணி பழனியப்பன்‌, உதவி ஆணையர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில்பாஸ்கர்‌, கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ (பொ)விமலா, கலாவதி, சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்கள்‌ இளங்கோ, நாசர்‌, ஜீவராஜ்‌, ஹரிபிரசாத்‌, கமலக்கண்ணன்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ விஜயகுமார்‌, சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...