வால்பாறை அருகே புல்மலை வனப்பகுதியில் காட்டுத்தீ - கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை தீவிரம்!

வால்பாறை அடுத்த அக்காமலை புல் மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள புல்மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து, காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில், முக்கிய இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அக்காமலை புல் மலை பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் மாநில விலங்கான வரையாடு, அறிய வகை குரங்குகள், புலி, யானை, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன.



மேலும், அக்காமலை புல் மலை பகுதி தொடர் மலையாக கேரளா மாநிலம் மறையூர் மற்றும் மூணார் பகுதி வரை நீள்கிறது. இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் செல்ல தடை விதித்து வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், நேற்று மாலை முதல் அக்காமலை புல்மலையில் புகை மூட்டமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் புல் மலைப்பகுதிக்கு சென்று தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...