ஆழியார் பகுதியில் சாலையில் நின்ற யானையால் போக்குவரத்து பாதிப்பு

ஆழியார் பகுதியில் சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இன்று மாலையும் ஆழியார் சாலையில் வாய்க்கால் மேடு பகுதியில் காட்டு யானை ஒன்று வழிமறித்து நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: ஆழியார் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆழியார் பகுதியில் சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருவதோடு, சாலையில் செல்லும் வாகனங்களைச் சேதப்படுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில் இன்று மாலை ஆழியார் சோதனை சாவடி அடுத்து வாய்க்கால் மேடு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.



யானை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை சாலை நின்றதால், தகவல் அறிந்து வந்த ஆழியார் சோதனைச் சாவடி வனத்துறையினர் வாகனத்தின் மூலம் யானையை வனப்பகுதியில் விரட்டினர்.



காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருவதால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...