உடுமலையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணியாளர்களை போக்குவரத்துக் கழகம் நேரடியாக நியமிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் உடுமலையில் உள்ள போக்குவரத்து கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு துணைத்தலைவர் செவந்தி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இதில், கோரிக்கைகளை விளக்கி மண்டல துணைப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன், கிளைத்தலைவர் பாபு, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் பெரிய மயில்சாமி உள்ளிட்டோர் பேசினார்.



ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களைத் தனியார் ஒப்பந்தம் மூலமாக பணி நியமனம் செய்யும் வகையில், அரசாணை வெளியிட்டதைக் கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் தேவையான பணியாளர்களை போக்குவரத்துக் கழகம் நேரடியாக நியமனம் செய்யக் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் புதிதாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஓய்வுக்கால பலன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...