கோவையில் சாம்பல் புதன் தினம் - 40 நாள் நோன்பைத் தொடங்கிய கிறிஸ்தவ மக்கள்!

சாம்பல் புதன் தினத்தையொட்டி கோவையில் தூய மைக்கேல் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலி ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.



கோவை: ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்குகிறது.



அதன்படி, இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்றைய தினம் கண்டறியப்பட்ட நிலையில், கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. இதனையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.



இந்த சிறப்பு திருப்பலியின்போது கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்படுகிறது. மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதன் அடையாளமாக இந்த சாம்பல் பூசப்படுவதாக கூறப்படுகிறது.



இதையொட்டி கோவை பெரிய கடை வீதி தூய மைக்கேல் பேராலயத்தில் திருப்பலி ஆராதனை நடைபெற்று அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசப்பட்டது. பேராலய பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி ஆராதனை மேற்கொண்டு அனைவரின் நெற்றியிலும் சாம்பலை பூசினர்.

இன்று துவங்கிய இந்த நோன்பானது ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி தினத்திற்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும். புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...