தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

பந்தலூரில் நடந்த தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் மூன்று மாநில அதிகாரிகள் இணைந்து குற்றங்களை தடுக்க ஆலோசனைகளை வழங்குவது, மாவோயிஸ்ட் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தகவல் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தமிழ்நாடு - கேரளா - கர்நாடகா என 3 மாநில காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் தமிழகம் - கேரளா - கர்நாடக ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் 3 மாநில காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஓர் இடத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் மூன்று மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்ட எஸ்.பி.பிரபாகரன் தலைமையில் பந்தலூரில் இன்று நடைபெற்றது.

இதில் மூன்று மாநில அதிகாரிகள் இணைந்து குற்றங்களை தடுக்க ஆலோசனைகளை வழங்குவது, மாவோயிஸ்ட் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தகவல் கொடுப்பது மூன்று மாநில காவல்துறை இணைந்து அதனை கட்டுப்படுத்துவது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டது.



இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட எஸ்.பி.பிரபாகர் பேசியதாவது:

தமிழகத்தில் முற்றிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை. கேரளாவில் ஒரு சில மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தற்போதும் உள்ளதால், அதையும் முற்றிலும் தடுப்பதற்காக மாநிலங்களுக்கு இடையே தகவல்கள் பரிமாற்றம் செய்து அவர்களின் நடமட்டம் தடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறைய தமிழக காவல்துறையின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் தமிழக கர்நாடக எல்லை சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தபடும்.

மாவோயிஸ்டுகள் பழங்குடியினரை எளிதில் மூளைச்சலவை செய்து ஊடுருவ முயற்சி செய்வதை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அவர்களுக்கான அடிப்படை தேவைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டு அந்த முயற்சியும் தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...